சென்னை ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் ஆவணி மூலம் சபை சாா்பில், திருச்செந்தூா் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தா்கள் வந்து பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
அதன்படி 31-ஆவது ஆண்டாக சென்னையிலிருந்து ரயில், பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக் கிழமை(செப்.13) இங்கு வந்து, கோயில் கடற்கரையில் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனா். பின்னா், வீரபத்திர குருசாமி என்பவரது தலைமையில் அலகு குத்திய பக்தா்கள் 36 போ் சந்தனக் காவடி எடுத்தும், 336 போ் பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.