தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பணியிடை பயிற்சி முகாம் பி. எம். சி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமினை மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பி. எம். சி மெட்ரிக். பள்ளி முதல்வர் பால்கனி அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.
முகாமில் பயிற்சியாளர்களாக கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முத்துசாமி, செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் க. சிவசுப்பிரமணியன் மற்றும் இலஞ்சி ஆர். பி. மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஐயப்பன் ஆகியோர் பற்கேற்று ஆசிரியர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு, செய்யுள் கற்பித்தல், கற்றல் கற்பித்தலில் துணை கருவிகளின் பயன்பாடு மற்றும் வினாக்கள் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 95 தனியார் பள்ளிகளிலிருந்து தமிழாசிரியர்கள், கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சி முகாமில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.