ஆறுமுகநேரில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் விநாயகம் மகன் சிவசுப்பிரமணியன் (23), இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவ சுப்பிரமணியன் அந்த பெண் கல்லூரிக்கு செல்வதற்காக ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து கம்பால் தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் காயல்பட்டனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் பிரபு குமார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை தேடி வருகிறார்.