அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!

60பார்த்தது
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!
சிங்கித்துறையில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 அங்கன்வாடி கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.  


தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயல்பட்டினத்தில் உள்ள சிங்கித்துறை மற்றும் அண்ணாநகர் பகுதியில் ரூ. 1. 62 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டது.  புதிய கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.


இந்த திட்டப் பணிகளை டிசிடபிள்யூ துணைத் தலைவர் கே. மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார். காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் தஸ்னேவிஸ் ராணி, சிங்கித்துறை கிராம நலக் குழுவைச் சேர்ந்த தேவதாஸ், ஆண்டன் மற்றும் டிசிடபிள்யூ நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி