திருச்செந்தூர் கோயிலில் புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

50பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபக்கோவிலான கிருஷ்ணா புரம், வெங்கடாஜலபதி கோவிலில் 2. 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடை பாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5. 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.,15) அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 29. 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19. 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48. 36 கோடி ரூபாய் செல வில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி