ஏரல் அருகே பெண்ணிடம் விதவை சான்றிதழ் பெற்று தருவதாகக் கூறி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரைச் சேர்ந்த மகாராஜா மனைவி முத்துமாரி. இவர் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்காக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுத்து வந்த மாங்கொட்டாப்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முகராஜா (54) என்பவர் ஆதரவற்ற விதவை சான்றிதழை பெற்று தருவதாக கூறி முத்துமாரியிடம் ரூ. 5500 பெற்றுக் கொண்டு, சான்று வாங்கி கொடுக்காமல், காலம் கடத்தி வந்தாராம்.
இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.