தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி: கனிமொழி எம்பி

54பார்த்தது
தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி: கனிமொழி எம்பி
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் மதகில் இருந்து எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலம் Komatsu சமூக பொறுப்பு நிதியிலிருந்து தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் இன்று (06. 07. 2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.


பின்னர் அவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் பெய்த கன மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. எனவே நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்று அனைரும் வலியுறுத்தினார்கள். எனவே இந்த ஆண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக தூர்வாற வேண்டும் என்பதற்காக இன்று தூர்வாறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  


கால நிலை மாற்றத்தினால் அதிக வெயில் மற்றும் அதிக மழை ஏற்படுகிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. எனவே மழை எந்த அளவுக்கு பெய்யும் என்று சொல்ல முடியவில்லை. நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை சரிசெய்துவிட்டால் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பினை குறைப்பதுடன், தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தாலம்.

தொடர்புடைய செய்தி