பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் கருணாநிதி என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புகழாரம். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய துரைமுருகன், 19 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த அவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். சுமார் அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்தவர் என்று கூறியுள்ளார்.