ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு தால் ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக பிரபலமான ‘தால்’ ஏரியில் மூன்று மிதக்கும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. படகுகள் மூலம் வாக்குச் சாவடிக் குழுவினர் மிதக்கும் வாக்குச்சாவடியில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.