இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிதி நிறுவனத்தில் 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், தேவநாதனுக்கு சொந்தமான WIN தொலைக்காட்சிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், 4 லட்சம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.