தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயதிருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 5. 30 மணிக்கு திருப்பலியும், மாலை 6. 30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனண ஆராதனையும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4. 30 மணி, காலை 5. 10 மணி, காலை 5. 50 மணி, காலை 7 மணிக்கும் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மிக்கேல் தூதர் முன் செல்ல ஆலயத் திருத்தேரில் மாதா கைகளில் குழந்தை இயேசுவை தாங்கியபடி காட்சியளித்தார்.
தொடர்ந்து புனித சந்தியாகப்பர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். மாதாவும், சந்தியாகப்பரும் நான்கு ரத வீதிகளில் வீதியுலா வந்தனர். அப்பொழுது வழிநெடுகிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு மற்றும் பூக்களை தூவியியும், பக்திபாடல்களை பாடியும் வானவெடிகளை வெடித்தும் வழிபாடு நடத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் முடிகாணிக்கை செலுத்தினர்.. இதை தொடர்ந்து திருபயணிகளுக்காக பகல் 12 மணிக்கு சிறப்புத் திருபலியும், மாலை 6மணிக்கு ஆராதனையும் நடைபெற்றது.