பிஎம்டி கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் தளவாய் இவரது மகன்கள் ரமேஷ் மற்றும் கருப்பசாமி கூலி வேலை பார்த்து வருகின்றனர்

அண்ணன் ரமேஷ் மற்றும் தம்பி கருப்பசாமி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடந்த 23ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குருசு கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர் அப்போது இரவு 11 மணி அளவில் இருவரும் ராட்டினத்தில் ஏறி சுற்றிக் கொண்டிருந்தனர்

அப்போது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு கூடியிருந்த பொது மக்கள் கூட்டத்தைப் பார்த்துஇரவு வெகு நேரம் ஆகிவிட்டது கலைந்து செல்லுங்கள் எனக்கூறி லத்தி மற்றும் இரும்பு பைபால் தாக்க துவங்கியுள்ளனர்

இதில் அங்கே நின்று கொண்டிருந்த கருப்பசாமியை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்

இதைத்தொடர்ந்து தனது மகன் கருப்பசாமியை கொடூரமாக தாக்கி காயத்தை ஏற்படுத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கருப்ப சாமியின் குடும்பத்தினர் வெள்ளூர் கிராம மக்கள் மற்றும் பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி