உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற 13ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் நடிகை தீபா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் 13ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட மகளிரணி செயலாளருமான பி. ராஜம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் பீட்டர், மாநில துணைத்தலைவர் வெற்றிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ஆனந்த்பொன்ராஜ், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா டிரஸ்ட் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், திரைப்பட நடிகை தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமிய கலை, ஓவியம், பரதம், வர்மகலை, யோக கலை, வில்வித்தை, தமிழ் இலக்கியம், சிலம்பம், வில்லுப்பாட்டு போன்ற பல்வேல்று துறைகளில் சாதனை படைத்த 80 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.