பாம்பு கடித்த நபரின் உடலை அசைத்தால் விஷம் உடலில் வேகமாக பரவும். பாம்பு கடித்த பகுதியை துணியால் இறுக்கமாகக் கட்டக்கூடாது. பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து, கடித்து உறிஞ்சுவது போன்ற செயல்களைச் செய்யவே கூடாது. அதாவது, சினிமாவில் காட்டுவது போல பாம்பு கடித்தால் வாய் வைத்து உறிஞ்சுவதை செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், அத்தகைய செயல்களைச் செய்வோரின் உடலிலும் நஞ்சு ஏறி ஆபத்தை விளைவிக்கலாம்.