தேர்தல் கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். சிவகங்கையில் இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என அதிமுக தலைமை எப்போதும் கூறவில்லை என்றார். மேலும், அண்ணாமலை தங்களை கூறியதாக கருதவில்லை என்றும், அதிமுகவுக்கு யாரையும் நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.