நகை கடை உரிமையாளரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை:

56பார்த்தது
நகை கடை உரிமையாளரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை:
நகை கடை உரிமையாளரை தாக்கி நகைகடையை சேதப்படுத்திய நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் மகன் மந்திரம். இவருக்கும் ராமசாமி மகன் பரமசிவம் மற்றும் அவரது சகோதரருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 28. 1. 2017 அன்று மந்திரத்தின் நகைக்கடைக்குள் நுழைந்த பரமசிவம் மந்திரத்திடம் தகராறு செய்து இரும்பு பட்டையால் அவரை தாக்கியதோடு நகை கடை ஷோ கேசையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி