வீடுபுகுந்து தங்க நகை திருடியவர் கைது!

83பார்த்தது
வீடுபுகுந்து தங்க நகை திருடியவர் கைது!
மாசார்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து தங்க நகையை திருடியவரை போலீசார் கைது செய்து, ½ சவரன் தங்க நகையை மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை நடுத்தெருவை சேர்ந்த கார்த்திகைவேலன் மனைவி ஜெயந்தி (36) என்பவர் கடந்த 05. 06. 2024 அன்று காலை வீட்டை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ. 20ஆயிரம் மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எட்டையாபுரம் நடுவீர்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிச்செல்வம் (47) என்பவர் ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து, ½ சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி