சிறப்பு கடன் தீர்வுத் திட்டம்: ஆட்சியர் தகவல்!

69பார்த்தது
சிறப்பு கடன் தீர்வுத் திட்டம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணைசாராக் கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தில் தகுதிவாய்ந்த கடன்தாரர்கள் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் அறிவிப்பின்படி ”கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு "சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் நடத்தப்பட உள்ளது.  

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன்களில் 9504 பயனாளிகளுக்கு ரூ. 58. 15 கோடி ரூபாய் வட்டி சலுகையாக கிடைக்கும். நாளது தேதி வரை இத்திட்டத்தின்படி 89 கடன்கள் முடிவு கட்டப்பட்டுள்ளன.  


எனவே தகுதிவாய்ந்த கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை உடன் அணுகி பயன் பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி சரகத் துணைப்பதிவாளரை 7338749403 / 0461-2320192, திருச்செந்தூர் சரகத் துணைப்பதிவாளரை 7338749405 / 04639-242294 மற்றும் கோவில்பட்டி சரகத் துணைப்பதிவாளரை 7338749404 / 04632-210370 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி,    தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி