ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை: பரிதாபம்!

547பார்த்தது
ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை: பரிதாபம்!
தூத்துக்குடியில் ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்தவர் தங்கப்பழம் மகன் அந்தோணி சதீஷ்குமார் (44). நில புரோக்கர்தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கடந்த 3 மாதமாக தூத்துக்குடியில் தனியாக வீடு எடுத்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி