கால்வாயில் பைக் கவிழ்ந்து விபத்து: வாலிபர் உயிரிழப்பு

1047பார்த்தது
கால்வாயில் பைக் கவிழ்ந்து விபத்து: வாலிபர் உயிரிழப்பு
ஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கொம்படி தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் பாலமுருகன் (30), இவரது மனைவி அனிதா. இவர் தாப்பாத்தி கிராமத்தில் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அங்கிருந்து அழைத்து வருவதற்காக பாலமுருகன் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார்.

தூத்துக்குடி மதுரை - நெடுஞ்சாலை ரோடு எட்டையாபுரம் அருகிலுள்ள யோகிராம் ஆசிரமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி அருகில் உள்ள கால்வாயில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (07.06.2024) இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி