சென்னை-தூத்துக்குடி இடையே ஆயுதபூஜை சிறப்பு ரயில் அறிவிப்பு

81பார்த்தது
சென்னை-தூத்துக்குடி இடையே ஆயுதபூஜை சிறப்பு ரயில் அறிவிப்பு
ஆயுதபூஜை வருகிற 11-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கும் ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்று ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே மொத்தமாக 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரயில் சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சை, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னையிலிருந்து அக். 8 ஆம் தேதி இரவு 11. 45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வந்தடைந்து மறுமார்க்கத்தில் 9 ஆம் தேதி மாலை 3: 30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி