சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்!

54பார்த்தது
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 44 காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வித அசம்பாதாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் முறப்பநாடு, சூரங்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 காவல் நிலைய கொலை வழக்கில் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுதந்தும் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10, 000/- அபராதம் பெற்று தந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தொடர்புடைய செய்தி