வாக்குச் சாவடி அமைக்கும் பணிகள் தீவிரம்!

63பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 1624 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் 288 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது இந்த வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 1057 சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு வரும் இயந்திரம் மற்றும் எழுது பொருட்கள் அடையாள மை, மற்றும் வாக்காளர் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களிக்கிறார். என்பதை அறிய முடியாத வகையில் அமைக்கப்பட உள்ள அட்டைகள் உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் சரியாக வந்துள்ளதா என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரி பார்க்கும் பணியில் வாக்குச்சாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிக்கு முன்பாக 100 மீட்டர் தூர எல்லை கோடு வரையும் பணியும் முடிவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி