அரசு குளங்களில் வண்டல் மண், கரம்பை மண் எடுக்க அனுமதி:

553பார்த்தது
அரசு குளங்களில் வண்டல் மண், கரம்பை மண் எடுக்க அனுமதி:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில்
அரசாணை எண். 50, தொழிற்துறை (MMC-1) நாள்: 27. 04. 2017-ன்படி, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 564 குளங்கள் / கண்மாய்கள் / ஏரிகள் / நீர்த்தேங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் வண்டல் மண் எடுக்கப்படும் அளவு மாவட்ட அரசிதழில் 20. 05. 2022 அன்று வெளியிடப்பட்டது.   


அதன்படி விவசாய பயன்பாட்டிற்காக கரம்பை மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் கிராம கணக்குகளின்படி நிலங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரமாக கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து அடங்கல் பெற்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே விவசாயிகள்  வண்டல் மண் / கரம்பை மண் எடுக்க விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :