எம்எல்ஏவின் தந்தை மறைவு: எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல்!

69பார்த்தது
எம்எல்ஏவின் தந்தை மறைவு: எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல்!
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏவின் தந்தை செல்லையா மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ, எம்பல்ஏ அவர்களுடைய தந்தை செ. செல்லையா அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும். அந்த வகையில், பாசமிகு தந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் அன்புச் சகோதரர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், செல்லையா அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி