புதிய திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார்!

589பார்த்தது
புதிய திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார்!
தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி பிப்ரவரி 24, 25 தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 - சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கொள்வதற்காக வருகை தருகிறார்.  


அதன்படி பிப்ரவரி 24, சனிக்கிழமை காலை 8. 00 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சிவஞானபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா, காலை 8. 30 மணி மார்த்தாண்டம்பட்டி தாய்சேய் துணை சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுவிழா. காலை 9. 00 மணிக்கு விளாத்திகுளம் சார்பதிவாளர் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, காலை 9. 30 மணிக்கு மந்திகுளம் இலந்தைகுளம் நியாயவிலைக் கடை திறப்பு விழா, இலந்தைகுளம் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா.


காலை 10. 00 மணிக்கு விருசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டடிடம், பயணியர் நிழற்குடை, துணை சுகாதார நிலையம் திறப்பு, காலை 10. 30 மணிக்கு நெடுங்குளம் பல்லாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டடிடம் திறப்பு விழா. காலை 11. 00 மணி தூத்துக்குடி அபிராமி திருமண மண்டபத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தி. மு. க மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி