கோவில்பட்டியில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 19 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் டேனியல் ஜெபராஜ். சமூக வலைதளம் மூலம் இவருக்கு அறிமுகமான நபா், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய டேனியல் ஜெபராஜ் சில செயலிகள் மூலம் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு 18 தவணைகளாக ரூ. 19 லட்சம் அனுப்பினாராம்.
ஆனால், வட்டியும் கிடைக்கவில்லை; பணமும் திரும்பக் கிடைக்கவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த டேனியல் ஜெபராஜ் சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆன்லைனில் புகாா் அளித்தாா். இதுகுறித்து மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, அந்த நபரைத் தேடிவருகின்றனா்.