கல்வி உதவித்தொகை வழங்கிய தவெக அஜிதா ஆக்னல்

58பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கட்சித் தொண்டர்கள் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென கட்சியின் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செயல்பட்டு கட்சிப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்

இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு 53 வது வார்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியும் கட்சி தொண்டருமான தர்மராஜ் திடீரென உடல் உடல் நல குறைவு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார் தர்மராஜ் க்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் நிறைமாத கர்ப்பிணிமாக அவரது மனைவி உள்ளார்

இதைத்தொடர்ந்து தர்மராஜை இழந்து வாடும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை இன்று தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது 5வது வயது பெண் குழந்தையின் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்று அந்த குழந்தையை படிக்க வைப்பதாக உறுதி அளித்தார் மேலும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக அந்த குழந்தைக்கான கல்வி கட்டணத்தை பள்ளிக்கு நேரடியாக சென்று தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ரூபாய் 20 ஆயிரத்தை செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி