உலகிலேயே மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக நைல் நதி முதலைகள் பார்க்கப்படுகிறது. இந்த முதலைகள் மனிதனைக் கடித்தால் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நம் உடல் பல துண்டுகளாக சிதறி விடும். இதன் கடிதிறன் அழுத்தம் 5000 PSI ஆகும். அதாவது ஒரு சதுர அங்குலத்தில் 5000 பவுண்டு (கிட்டத்தட்ட இரண்டு டன்) எடையை கொண்டு அழுத்தி சேதப்படுத்தியதற்கு சமமாகும். இந்த நதியில் வாழும் ‘குஸ்டாவ்’ எனப் பெயரிடப்பட்ட முதலை இதுவரை 300 பேரைக் கொன்றதாக கூறப்படுகிறது.