திண்டுக்கல்: நத்தம் தில்லை காளியம்மன் கோவில் 27ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை சிறப்பு பூஜைகள் நேற்று (ஆகஸ்ட் 03) நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்டு காளியம்மனுக்கு திருமஞ்சனம், பால், தேன், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. அதே போல் மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.