தெப்பத் திருவிழா பாதுகாப்புப் பணிகள் ஆய்வு

69பார்த்தது
தெப்பத் திருவிழா பாதுகாப்புப் பணிகள் ஆய்வு
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவுக்கான பாதுகாப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குட்பட்ட கமலாலயக் குளத்தில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தெப்பத் திருவிழா, மே 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தெப்பத் திருவிழாவைக் காண ஏராளமானோா் வருவாா்கள் என்பதால், காவல்துறை சாா்பில் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தெப்பத் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

தெப்பம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், வாகன நிறுத்தும் இடம் குறித்தும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி