எட்டு ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியாளிக்கும் தென்கோவனூர் சாலையால் சீரமைக்க கிராம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திரு ராமேஸ்வரம் அடுத்துள்ள தென்கோவனூர் கிராமத்திற்கு கோரை யாரு மதகு எனும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை செல்கிறது இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டதாகும். வடகொவனூர் சின்னக்கேனி தோப்பு வாக்கோட்டை உள்ளிட்ட பகுதிககுக்கு சொல்லும் இந்த சாலை இப்பகுதி மக்களின் போக்கு வராத்திற்கு இன்றி யாமையாத சாகையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த சாலையின் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாததால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பள்ளி கல்லூரி செல்கும் மாணவர்கள் விவசாய பொருட்களை எடுத்து செல்கும் வாகனங்கள் இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்ததகிற்கு லாரிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையின் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதநாள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எட்டு ஆண்டிற்கு மேலாக பழுதடைந்துள்ள தென்கோவனூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.