திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரங்கம் திருப்பனஞ்சேரி கிராமத்தில் எழுந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இரண்டு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் உலக பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டிய குழந்தை வரம் இல்லாதவருக்கு குழந்தை வரம் வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயம் வளம் வந்து கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த புனித கழசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு நாக கன்னியம்மன், மகா மாரியம்மன் முன்னாடியான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிகார காவல் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை மகா தீபாரதனை நடைபெற்றது.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்கள் வழங்கி நாககன்னி அம்மன் மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக திருப்பாணஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றது.