தமிழ்நாடு விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம்

547பார்த்தது
தமிழ்நாடு விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோட்டூர் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் அமைப்பின் ஒன்றிய தலைவர் கே. எம். அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாககுழு உறுப்பினர் க. மாரிமுத்து. எம்எல்ஏ, சிபிஐ கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம். செந்தில்நாதன், சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பி. பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள், அமைப்பின் ஒன்றிய செயலாளர் பி. சௌந்தரராஜன் சங்கத்தின் செயல்பாடு குறித்து பேசினார், கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. நடப்பாண்டு குருவை சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரின்றி கருகிப் போன பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனே விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும், 2. சம்பா தாளடி சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது, அதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி