திருவாரூரில் கண்ணில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டம்

55பார்த்தது
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கீழக்காவாதுகுடி ஊராட்சி சேர்ந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திரண்டு தங்களுடைய ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கண்களில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 பிறகு அவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். நகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைத்தால் நாங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இலவச வீடு கட்டும் திட்டம் முதலான பலன்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் எங்கள் ஊராட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் எனவும் தெரிவித்தார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி