திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடர் திருவிழா வெகு விபச்சியாக நடைபெற்றது தங்கள் வேண்டுதல் நிறைவேடைய வேண்டி பால்குடங்கள் எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதகாவலி கிராமத்தைச் சேர்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழா வெகு விமர்சையாக கடந்த வாரம் காப்பு கட்டிலுடன் துவங்கியது.
முக்கிய திருவிழா ஆன இன்று சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால்குடங்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் ஆலயத்தில் செலுத்தினர் இந்த நிகழ்வில் அப்பகுதியில் உள்ள திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆர்வி முத்துக்குமார் பிள்ளை குடும்பத்தினரால் அன்னதானங்கள் மகா தீபாராதனைகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் வருகை தந்த அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் கிராமவாசிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.