விநாயகர் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

76பார்த்தது
முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.
முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது. பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.
ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ. ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், உள்ளிட்டா காவல் துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி