அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு ஆலங்குடியில் நடைபெற்றது

57பார்த்தது
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு ஆலங்குடியில் நடைபெற்றது
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வலங்கைமான் ஒன்றிய 18 வது மாநாடு ஆலங்குடியில் தோழர் சுதாகர் லெனின், விஜய், அபர்ணா இவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துறை. அருள்ராஜன் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார், மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ரங்கராஜன் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட (பொறுப்பு) கே கேசவராஜ் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து வழங்கினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு ராஜா எம் பி எட் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில், திருச்சி டு நாகப்பட்டினம் செல்லும் பைபாஸ் சாலை நாத்தங்குடியில் தொடர்ந்து விபத்துத்தூகள் நடந்து வருகிறது ஆகவே அந்த தற்காலிகமாக ரவுண்டானாவும், நிரந்தரமாக மேம்படமும் அமைக்கப்பட வேண்டும். ஆலங்குடி மருத்துவமனையில் செவிலியர் பற்றாவுரையும் இரவு நேர மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வலங்கைமான் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், லேப் டெகரேஷன், மார்ச்சுவேரி ஊழியர், இரவு நேர டாக்டர் நியமிக்கப்பட வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாவீரன்பகசிங் பெயரில் மாற்றப்பட வேண்டும்,
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி