திகில் படம் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பார்க்கும்போது நம் உடலில் 113 கலோரிகள் குறைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பேய் படம் பார்ப்பதால் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். அட்ரினலைன் ஹார்மோன் மிகுதியாக சுரப்பதனால் பசி கட்டுப்படுத்தப்படும். அதே சமயம், மெடபாலிக் விகிதம் அதிகரித்து நம் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் நம் உடலில் கலோரி குறையுமாம். இதனால் உடல் எடையும் குறையும். ஆனால் படம் பார்க்கும்போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.