ஸ்ரீ செம்பாயி அம்மன் ஸ்ரீ மகாமாரியம்மன் தீமிதி திருவிழா

60பார்த்தது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52. சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ செம்பாயி அம்மன் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 22 ஆம் நாள் திருவிழாவாக தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரை மாதம் ஒன்பதாம் தேதி துவங்கிய விழாவானது தினந்தோறும் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீஅய்யனார் ஸ்ரீபிரம்ம ஸ்ரீஅய்யஸ்ரீனார் ஸ்ரீகாளியம்மன்
ஸ்ரீசெம்பாயி அம்மன் ஸ்ரீமகாமாரியம்மன் புறப்படும் சித்திரை 15 ஆம் தேதி ஸ்ரீமகா மாரியம்மன் பூச்செறிதல் விழாவும் சக்தி கரகம் அதனைத் தொடர்ந்த இன்று காலை தீமிதிக்கும் பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு மதியம் ஸ்ரீமகா மாரியம்மன் புறப்பட்டு சிமிழி கிராம வீதிகளை வலம் வந்து மேல தாளங்கள் முழங்க மாலை சரியாக 6 மணி அளவில் தீ குண்டத்தில் முதலில் சக்தி கரகம் இறங்கியவுடன் தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதன்பிறகு சக்தி கரகம் நடனத்துடன் வான வேடிக்கைகள் வெகு விமர்சையாக நடைபெற்று இரவு இன்னிசை கச்சேரியும் தொடர்ந்து நடைபெற்று நாளை மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்ந்து 22 நாட்களாக நடைபெற்று இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி