BREAKING: +1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது!

11225பார்த்தது
BREAKING: +1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியிடப்பட்டுள்ளது. 91.17% சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் தேர்வை எழுதினார்கள்.

தொடர்புடைய செய்தி