நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம் - மன்னாா்குடி ரயில் பாதையாகும். மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் செல்கின்றன. இந்நிலையில், நீடாமங்கலம் - மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வே கேட் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.