காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுமி மீது போதையில் இளைஞர்கள் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் சிறுமி மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. உடனே, ஆட்டோவில் இருந்தவர்கள், சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, இளைஞர்களை விசாரித்ததில் அவர்கள் போதையில் இருந்தது தெரியவந்தது.