அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். பராசக்தி, இட்லி கடை, STR 49 படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 4வது தயாரிப்பாகும் இப்படம். அதர்வாவின் தந்தையான நடிகர் முரளி 'இதயம்' படத்தில் நடித்திருந்த நிலையில், அதர்வா படத்திற்கு 'இதயம் முரளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.