கேரளா: கோழிக்கோட்டில் நடைபெற்ற திருவிழாவின் போது யானைகள் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயிலாண்டி மணக்குளங்கர கோயிலில் நடந்த திருவிழாவில் பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட 2 யானைகள், அங்கிருந்த மக்களை தாக்கியது. இதில், லீலா மற்றும் அம்முகுட்டி என்ற பெண்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரு யானைகளும் அடக்கப்பட்டன.