நன்னிலத்தில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
கோவில்களை சீரழிக்கும் தமிழக அரசே கோவிலை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து தமிழ்நாட்டின் 1000 மேற்பட்ட இடங்களில் இன்று இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக நன்னிலம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாயிர கணக்கான கோயில்கள் இடிந்த நிலையில் சிதலமடைந்துள்ளது. பல கோவில்களில் விளக்கு இல்லை, வழிபாடு இல்லை, ஒரு கால பூஜையும் நடத்துவதில்லை ஆனால் தரிசன கட்டணம், அர்ச்சனை கட்டணம், நேர்த்திக்கடன் கட்டணம், விளக்கு பூஜை கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம், காது குத்த கட்டணம் என பல்வேறு பெயர்களில் கோவில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசார் உடனடியாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி