டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
மன்னார்குடி பனா நிறுவனம் மற்றும் மண்ணின் மைந்தர்கள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் அரசு தேர்வுகள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை இன்று தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கோட்டாட்சியர் கீர்த்தனாமணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.