திருவாரூர்: உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் அமுது படையல்

79பார்த்தது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில் ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் அத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் தொடர்ந்து அமுதுபடையில் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று நூறாவது ஆண்டாக ஸ்ரீ உத்தராபதிஸ்வரருக்கு அமுது படையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கும், உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று புஷ்பங்களால் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அமுது படையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவனடியார்களின் கைகளினால் உணவு வாங்கி. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக்கொண்டு அந்த உணவை உண்ட பின் பிரார்த்தனை செய்து வேண்டுதல் செய்தால் நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி