முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழைபெய்துதது இதனால் தாழ்வான பகுதிகள் நீர்நிலைகளில் நீர் தேங்க தொடங்கியது. கற்பகநாதர்குலம் பகுதியில் இந்த ஆண்டு சுமார்350 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் வடிகாலாக உள்ள வளவன்ஆற்றில் கோரை, வெங்காயதாமரை செடிகள் மண்டி வயல்களில் தேங்கிய நீர் வடியாமல் உள்ளது. இதனால் சுமார் 350ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.