திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மீனாட்சி வாய்க்கால் கீழத்தெருவைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்(30 வயது) என்பவர் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர்.